
இந்தியாவில் கனரா வங்கி தங்கள்
வாடிக்கையாளர்களுக்கு மூன்று வகையான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்
மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று பயன்பெறலாம் என்று கனரா
வங்கி தெரிவித்துள்ளது.
கடன் திட்டங்கள் :
கொரோனா பெருந்தொற்றால்
விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான மக்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் தொழில்கள்
முடங்கியுள்ளது. உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலில் ஏற்பட்ட
சரிவால் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு மத்திய ரிசர்வ் வங்கி வணிக நிறுவனங்களுக்கு பல்வேறு
சலுகைகளை அறிவித்தது. கடன் தவணையை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது.
மற்ற வங்கிகளை தொடர்ந்து கனரா
வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார கடன், தொழில் கடன் மற்றும் பர்சனல் லோன் போன்ற 3 வகையான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சுரக்ஷா பர்சனல் லோன்
திட்டத்தின் கீழ் ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படுகிறது. செப்டம்பர் 30,
2021 வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரா சுரக்ஷா திட்டத்தின் மூலம்
மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 கோடி வரை சுகாதார கடன் வழங்கபடுகிறது. அதே போல் கனரா ஜீவன் ரேகா
திட்டத்தின் கீழ் மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு
அவசர கடன் வழங்கப்படும் என கனரா வங்கி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரா
சிகித்ஸா தொழில் கடன் மூலம் ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும். இந்த கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று
பயன்பெறலாம் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது.
0 Response to "கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்!"
Post a Comment