தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கொரோனா பாதிப்பு – ஐசிஎம்ஆர் தகவல்!

Trending

Breaking News
Loading...

தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கொரோனா பாதிப்பு – ஐசிஎம்ஆர் தகவல்!

தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கொரோனா பாதிப்பு – ஐசிஎம்ஆர் தகவல்!

 


தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் உருமாறிய டெல்டா வகை வைரஸ் தொற்று பாதிக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) தகவல் தெரிவித்துள்ளது.
 
டெல்டா பிளஸ் வைரஸ்:
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் அதிகம் வயதானவர்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் முதலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசின் அனுமதியுடன் கடந்த மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை செலுத்தி 40 நாட்கள் கழித்து 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
 
தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும். மேலும் இரண்டு டோஸுக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதால் கொரோனா பரவாதா என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் ஓரளவு வைரஸின் வீரியம் கட்டுப்படுத்தப்படும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
 
மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் உருமாறிய டெல்டா வகை வைரஸ் பாதிக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை, இந்தியாவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சுமார் 4000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

0 Response to "தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கொரோனா பாதிப்பு – ஐசிஎம்ஆர் தகவல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel