அமலுக்கு வருகிறது ஓபிசி பட்டியல் சட்டம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல் விவரங்கள் உள்ளே!

Trending

Breaking News
Loading...

அமலுக்கு வருகிறது ஓபிசி பட்டியல் சட்டம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல் விவரங்கள் உள்ளே!

அமலுக்கு வருகிறது ஓபிசி பட்டியல் சட்டம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல் விவரங்கள் உள்ளே!


இதர பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடு சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இது விரைவில் அமலுக்கு வர உள்ளது.
 
இட ஒதுக்கீடு:
 
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு பிரச்சனை சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஓபிசி போன்ற இதர பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலத்திற்கு உரிமை இல்லை என்று மாநிலத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் மாநிலங்களே பட்டியல் தயாரிக்கும் உரிமைக்கு இடைக்கால தடை விதிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்து இருந்தது.
 
இந்தநிலையில் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தீவிர அமலிக்கு பின் ஒரு சில மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற மசோதாக்கள் ஒப்புதலுக்காக குடியரசு தலைவர்க்கு அனுப்பப்பட்டது. இந்த வரிசையில் ஓபிசி இதர பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடு சட்டமும் இணைந்துள்ளது. தற்போது இந்த மசோதாவிற்கு அனுமதி கிடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
அதாவது இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதல் கிடைத்துள்ளதால் தற்போது இது சட்டமாக நாடெங்கிலும் அமல்ப்படுத்தப்பட உள்ளது. எனவே இதன் மூலம் உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை தகர்க்கப்பட்டு மாநிலங்களே இட ஒதுக்கீடு தொடர்பான பட்டியல்களை தயாரித்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகி அது உறுதியும் செய்யப்பட்டிருக்கிறது என குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

0 Response to "அமலுக்கு வருகிறது ஓபிசி பட்டியல் சட்டம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல் விவரங்கள் உள்ளே!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel