தமிழகத்தில் ஆன்லைன் மூலம்
வேலைவாய்ப்பு பதிவை எளிதாக வீட்டில் இருந்து புதுப்பிப்பு செய்யலாம். அதற்கான எளிய
வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் அரசு பணிகளில் சேர
விரும்புபவர்கள் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது
அவசியம். முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்பவர்களுக்கு
தற்போது 10, 12ம் வகுப்பு
முடித்தவுடன் அந்தந்த பள்ளிகள் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்வது அவசியமாகும். மேலும்
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தேர்வுகள் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
அதனால் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.
அதுவும் கொரோனா தொற்று பரவும்
இந்த காலகட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் நிலவுகிறது. இதனை கருத்தில்
கொண்டு அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து அதை தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும்
திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
மேலும் 2017 முதல் 2019 வரையிலான காலத்தில்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என்று கால அவகாசமும் அளித்துள்ளது.
வழிமுறைகள்:
முதலில் https://tnvelaivaaippu.gov.in/Empower/
என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் உங்கள் வேலைவாய்ப்பு பதிவு
எண்ணை பதிவிட வேண்டும்
அதன் பிறகு நிரந்தர பாஸ்வேர்டு
நீங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும்.
அதை பதிவிட்டு உள்நுழைய
வேண்டும். அதில் உங்கள் விவரங்களை சரிபார்த்த பின்னர் Update Profile
என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்த முகப்பு திரையில் Renewal
என்பதை க்ளிக் செய்து Candidate
Renewal ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு
புதுப்பிப்பு செய்து கொள்ளலாம்.
0 Response to "தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பு – ஆன்லைனில் செய்வது எப்படி? "
Post a Comment