கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரம், தற்போது தொழில்நுட்ப துறையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகளுடன் மீண்டு வர
துவங்கியுள்ளது. அதே நேரத்தில் பிரபல IT துறைகளும் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்து வருகிறது.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் கொரோனா பரவல்
ஏற்படுத்திய மிக முக்கியமான பாதிப்புகளில் ஒன்று வேலை இழப்பு. கடந்த 2020 ஆம் ஆண்டு உருவான கொரோனா பேரலையால், பல்வேறு அரசுத்துறை, தொழில்துறை, தனியார் துறை
உள்ளிட்ட அனைத்தும் முடங்கியது. இவற்றில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், செய்வதறியாது திகைத்த பெரு நிறுவனங்கள் கூட தனது ஊழியர்களை வேலையில்
இருந்து நீக்கியது. அதனால் ஒரு புறத்தில் பொருளாதார இழப்புகள் பெருகிக்கொண்டே
இருக்க மறுபக்கத்தில் வேலை வாய்ப்பின்மை, வேலை இழப்பும் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும்
கொரோனா 2 ஆம் அலை தாக்கம்
உருவாகி, அவை ஓய்ந்து வரும்
சூழலில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம் என்பது நிமிர்ந்து வருகிறது. இது
தொடர்பாக Naukri அளித்துள்ள தகவலின்
படி, இந்தியாவில் புதிய பணியமர்த்தல் ஜூலை
மாதத்தில் 11% அதிகரித்துள்ளதாக
தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் தொழில்நுட்ப துறையை சார்ந்தே அமைந்துள்ளது
கவனிக்கத்தக்க ஒன்றாகும். கொரோனா காலத்தில் பல மென்பொருள் துறைகளுக்கான சேவைகள்
அதிகரித்துள்ளதால், அவை புதிய ஊழியர்களை
பணியமர்த்தி வருகிறது.
அந்த வகையில் IT துறையில் உருவாக்கப்படும் புதிய வேலை வாய்ப்புகளை, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 18% அதிகரித்துள்ளது. அதாவது பெங்களூரில் 17%, ஹைதராபாத்தில் 16%, புனேவில் 13%,
டெல்லியில் 13%, மும்பையில் 10% மாக புதிய
பணியமர்த்தல் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இந்த நிறுவனங்களின்
புதிய வேலை வாய்ப்புகள், பெருமளவு பட்டம் படித்த புதியவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கதாகும். இந்த வேலை வாய்ப்புகள் ஹோட்டல், உணவகங்கள் மற்றும் டிராவல் துறைகளை பொருத்தளவு 36% பெருகியுள்ளது.
தொடர்ந்து சில்லறை துறையில் 17%,
வரித் துறையில் 27%, FMCG துறையில் 17%, வங்கி மற்றும்
நிதித்துறையில் 13% மாக உயர்ந்துள்ளது.
ஆனால் கல்வி மற்றும் பயிற்சி துறையின் வேலை வாய்ப்புகள் 8% வளர்ச்சியும் பார்மா, பயோடெக், கிளினிக்கல்
துறையில் 5% சரிவும்
காணப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையிலும் வேலை
வாய்ப்புகள் 15% சரிந்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2 ஆம் அலை குறைந்து வருவதால் பொருளாதார நடவடிக்கைகள் விரைவில் மீண்டு வரும்
என நம்பிக்கை கிடைத்துள்ளது.
0 Response to "இந்தியாவில் IT துறையில் உயரும் வேலைவாய்ப்புகள் – ஆய்வு தகவல்!"
Post a Comment