CBSE தனித்தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு வெளியீடு!

Trending

Breaking News
Loading...

CBSE தனித்தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு வெளியீடு!

CBSE தனித்தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு வெளியீடு!


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (
CBSE) 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் தனித் தேர்வர்களுக்கான சேர்க்கை அட்டைகளை (admit cards) கல்வி வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.
 
சேர்க்கை அட்டைகள்
 
கடந்த மே மாதம் நடத்தப்படவிருந்த CBSE கல்வி வாரியத்தின் பொதுத் தேர்வுகள் கொரோனா 2 ஆம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு தேர்வுகளை நடத்துவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுகளை எழுதவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை அட்டைகளை CBSE வாரியம் வெளியிட்டுள்ளது. 
 
 
CBSE வாரியத் தேர்வுகளை எழுத கடந்த ஆண்டில் தோல்வியுற்ற விண்ணப்பதாரர்கள், தனியார் தேர்வர்கள், ‘சிறப்பு பாடங்கள் பிரிவின் கீழ் பதிவு செய்த தேர்வர்கள், 2019-20 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வாய்ப்பு பிரிவு வேட்பாளர்கள், தனியார் சிறப்புத் தேர்வர்கள் ஆகியோர் தேர்வில் பங்கேற்கலாம் என்று வாரியம் தெரிவித்துள்ளது. இந்த மாணவர்களுக்கு நேரடி முறையில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
அந்த வகையில் CBSE தனித் தேர்வர்களுக்கான 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற உள்ளது. மேலும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் செப்டம்பர் 15 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ளதான சேர்க்கை அட்டைகளை தேர்வர்கள் CBSE இணையதளத்தில் இருந்து விண்ணப்ப எண், முந்தைய ஆண்டு ரோல் எண் அல்லது பெயரைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை பதிவிறக்கம் செய்ய,
 
முதலில் https://cbseit.in/cbse/web/pvtform/pvtAdmCard.aspx என்ற இணைப்பிற்கு செல்லவும்.
தேவையான தகவலை உள்ளிட்டு, Proceed என்பதைக் கிளிக் செய்யவும்
இப்போது அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்து கொள்ளவும்.

0 Response to "CBSE தனித்தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு வெளியீடு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel