
தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல்
பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் தயாராக
இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில்
பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 மாதங்களாக
மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசித்த தமிழக அரசு வரும்
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. இது
தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் கூறுகையில்,
‘தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல்
பள்ளிகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வரும் இந்த கருத்துக்கு
ஒப்புக்கொண்டுள்ளார். அந்த வகையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான
வழிகாட்டுதலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இப்போது அதில் ஏதேனும் சில
திருத்தங்களை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதன் கீழ் நேரடி வகுப்புகளில்
கலந்து கொள்ளும் மாணவர்கள் வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து 50% மாணவர்கள்
சுழற்சி முறையில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கிருமி
நாசினி வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதை உறுதிபடுத்த
வேண்டும். பள்ளி வளாகங்களில் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்திருப்பது உள்ளிட்ட
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இத்தகைய முன்னேற்பாடுகள்
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் கீழ் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்
9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக
இருக்கிறோம். மேலும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவதற்கும், பணி மாறுதல் கலந்தாய்வு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!"
Post a Comment