
தமிழகத்தில் சில ரயில் நிறுவனங்களில்
பார்சல் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில ரயில்
நிலையங்களில் செப்டம்பர் முதல் பார்சல் புக்கிங் நிறுத்தப்படுகிறது என ரயில்வே
துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே பார்சல் புக்கிங்:
தென்னகத்தில் பல்வேறு பகுதிகளில்
இருந்து பார்சல்கள் ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு
தனியார் கூரியர் நிறுவனங்கள் அதிவேகமாக பார்சல்களை உரிமையாளரிடம் கொண்டு
சேர்க்கின்றனர். அதன் காரணமாக மக்கள் தனியார் நிறுவனங்களை நாடி வருகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் போன்றே அஞ்சல் துறையும் விரைவு அஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தி
அதை செயல்படுத்தியும் வருகிறது.
அதன் காரணமாக மக்கள் பெரிதும் அஞ்சல்
துறையின் விரிவு அஞ்சல் அல்லது தனியார் கொரியர் நிறுவனங்களை நாடி வருகின்றனர்.
இதன் காரணமாக ரயில்களில் பார்சல் புக்கிங் சேவை பயன்படுத்துவது கணிசமாக
குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசியில் இருந்து தீப்பெட்டி பொருட்கள்
வெளிமாநிலங்களுக்கு ரயில்வே பார்சல் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது
அவை அனைத்தும் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு விரைவாக அனுப்பும் நோக்கில் லாரிகள் மூலம்
அனுப்பப்படுகின்றன.
ஒரு சிலர் சொந்தமாக லாரிகளை வாங்கி
அதன் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது
ரயில்வே துறை மூலம் பார்சல் அனுப்புவது அரிதான ஒன்றாகியுள்ளது. இதனை தொடர்ந்து பல
ஊர்களில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்வே பார்சல் சேவை செப்டம்பர் முதல்
நிறுத்தப்பட உள்ளது. வெளியூரிலிருந்தும் இந்த ஊர்களுக்கு பார்சல் வராது என்பதால்
சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை,
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய ரயில்
நிலையங்களில் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பார்சல் புக்கிங்
நிறுத்தப்படுகிறது.
0 Response to "செப்.1 முதல் ரயில்வே பார்சல் சேவைகள் நிறுத்தம் – பொதுமக்கள் கவனத்திற்கு!"
Post a Comment