தனியார் வாகனங்களில் அரசை குறிக்கும் ‘G’ எழுத்து – காவல்துறை எச்சரிக்கை!

Trending

Breaking News
Loading...

தனியார் வாகனங்களில் அரசை குறிக்கும் ‘G’ எழுத்து – காவல்துறை எச்சரிக்கை!

தனியார் வாகனங்களில் அரசை குறிக்கும் ‘G’ எழுத்து – காவல்துறை எச்சரிக்கை!

 


தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்படும் தனியார் வாகனங்களில்
, அரசு வாகனங்களில் பயன்படுத்தும் G என்ற எழுத்தை உபயோகிக்க கூடாது என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
காவல்துறை அறிவிப்பு
 
தமிழகத்தில் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் அரசு எனும் பெயருக்கு பதிலாக G என்ற குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். இந்த குறியீடுகளை சில தனியார் வாகனங்களும் பயன்படுத்துவதாக குற்றசாட்டுகள் எழுந்து வந்தது. இதையடுத்து தனியார் வாகனங்கள், ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் அரசு அதிகாரிகளின் வாகனங்களில் அரசை குறிக்கும் G எழுத்து இருக்கக்கூடாது.
 
 
அப்படி பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வாகனத்தை பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. அதாவது அரசு சார்பில் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் வாகனங்கள் G என்ற எழுத்துடன் பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்படுவது வழக்கம். அதனால் மத்திய மற்றும் மாநில அரசை சாராத ஒப்பந்த பணியாளர்கள் அவர்களது வாகனங்களில் G குறியீட்டை பயன்படுத்தாமல் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் இன்று (ஆகஸ்ட் 25) வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அல்லாத G என்ற குறியீட்டுடன் வலம் வரும் தனியார் வாகனங்கள் மூலம் மோசடிகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இத்தகைய நடவடிக்கைகள் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Response to "தனியார் வாகனங்களில் அரசை குறிக்கும் ‘G’ எழுத்து – காவல்துறை எச்சரிக்கை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel