
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையை இன்று அமைச்சர் ஐ பெரியசாமி
அவர்கள் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் பயிற்கடனில் ரூ.516 கோடி முறைகேடு
நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பயிர்க்கடன் முறைகேடு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக
வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில், முதல் முறையாக 2021-22 ஆம்
ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்
முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண்மைத் துறைக்கென தனி பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தொழிலக கூட்டுறவு வங்கியில்
சிறு குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகளை வைத்து ரூ.7 கோடி மோசடி
நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறி இருந்தார். அதனை தொடர்ந்து
பயிர்க்கடன் வழங்கியதில் மோசடிகள் நடந்துள்ளாதாக அமைச்சர் ஐ. பெரியசாமி
கூறியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் தாக்கல் செய்து
உரையாற்றினார்.
அதில் கடந்த ஆட்சியில் ரூ. 516 கோடிக்கு
முறைகேடாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் சேலம், நாமக்கல்
மாவட்டங்களில் மட்டும் ரூ.503
கோடிக்கு பயிர்க்கடனில் முறைகேடு நடந்துள்ளதாக
கூறப்படுகிறது. மேலும் தகுதியான நபர்களுக்கு கூட்டுறவு வங்கியில் பெற்ற நகைக்கடன்
தள்ளுபடி குறித்த அறிவிப்பினை முதல்வர் வழங்குவார் என்றும் அவர் கூறினார். சிட்டா
அடங்கல் குறிப்பிட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்துக் காட்டி பல மடங்கு
கூடுதல் தொகையை கடனாக பெற்றுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
0 Response to "தமிழக கூட்டுறவு வங்கி பயிர்க்கடனில் ரூ.516 கோடி முறைகேடு – அமைச்சர் ஷாக் ரிப்போர்ட்!"
Post a Comment