2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை
நீட்டிக்க ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடகா மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
வீட்டில் இருந்தே வேலை:
கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவிய காலகட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது. இதன் மூலம் ஊழியர்கள் வேலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயம் நிறுவனத்திற்கும் எந்த இழப்பும் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த கால கட்டத்தில் கர்நாடகாவில் பெங்களூரு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது.
கர்நாடகாவில் பெங்களூரு அவுட்டர் ரிங்
சாலையில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து போக்குவரத்து
நெரிசலை குறைக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை
நீட்டிக்க ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடகா அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மென்பொருள் மற்றும் சேவை
நிறுவனங்களின் தேசிய சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து
பணிபுரியும் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் அவுட்டர் ரிங் சாலையில் போக்குவரத்து
நெரிசல் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், இங்கு மெட்ரோ
ரயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டால் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்துவது
கடினமாக மாறிவிடும் என கோரப்பட்டுள்ளது.
0 Response to "வீட்டில் இருந்தே வேலை (WFH) செய்யும் முறை நீட்டிப்பு – ஐடி நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தல்! "
Post a Comment