MBA, MCA சேர்க்கைக்கு ஆக.11 முதல் விண்ணப்பிக்கலாம்!

Trending

Breaking News
Loading...

MBA, MCA சேர்க்கைக்கு ஆக.11 முதல் விண்ணப்பிக்கலாம்!

MBA, MCA சேர்க்கைக்கு ஆக.11 முதல் விண்ணப்பிக்கலாம்!

 



எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆகஸ்ட்
11 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
2021-2022ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக் கழகம் / துறைகள் (University Departments) / வட்டார மையங்கள் (Regional Centers) / அண்ணாமலை பல்கலைக்கழகம் / சென்னைப் பல்கலைக்கழகம் / இதர பல்கலைக்கழகங்கள்/ சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.
 
 
 
1. விண்ணப்பிக்கும் முறை:
 
விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.
 
2. விண்ணப்பதாரர்கள் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புகளுக்குத் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
 
இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு தொடங்கும் நாள்: 11.08.2021, முடிவடையும் நாள்: 31.08.2021.
 
3. பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.
 
4. இந்தக் கல்வியாண்டில் MBA / MCA முதுநிலைப் பட்டப்படிப்பு கலந்தாய்வு  நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
 
5. மேலும் விவரங்கள் அறிய  www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” பக்கத்தில் பார்க்கவும்.
 
கூடுதல் தகவல்களுக்கு 0422 - 2451100

0 Response to "MBA, MCA சேர்க்கைக்கு ஆக.11 முதல் விண்ணப்பிக்கலாம்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel