
கொரோனா தாக்கம்
குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்க அனுமதிக்க
அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி திறக்கும் தேதி
செப்டம்பர் 15 ஆக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை
காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி:
கொரோனா தொற்று
தீவிரமாக பரவியதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும்
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி
எழுப்பி வந்தனர். ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திருப்தி
அளிக்காத காரணத்தால் செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு
அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கல்லூரிகள் திறக்க
வலியுறுத்தப்பட்டது. தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி திறக்கும் தேதி
ஒத்திவைக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதி கல்லூரி திறக்கப்படும் என முதல்வர்
கூறியுள்ளார். கல்லூரியின் முன்பாக உயர்மட்ட மேம்பால பணிகள் நடைபெறுகின்றன.
இதற்காக கல்லூரி வாசலில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் செப்டம்பர்
இரண்டாம் வாரத்தில் முடிவடைந்துவிடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து கல்லூரி துறைத் தலைவர்கள்
கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் செப்டம்பர் 15ம் தேதி கல்லூரியை திறக்கலாம் என
முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் இது
குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி கல்லூரி
திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கூறியுள்ளார். செப்டம்பர் 15ம் தேதிக்கு பின் கல்லூரிகள்
திறக்கப்பட்டதும் பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
0 Response to "காமராஜர் பல்கலை திறப்பு செப்.15க்கு ஒத்திவைப்பு – முதல்வர் அறிவிப்பு!"
Post a Comment