
கொரோனா முதல் அலை
மற்றும் இரண்டாம் அலை என தீவிரமாக தாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டில் 54% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி
கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா:
நாடு முழுவதும்
கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்தது. இதனை தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளில்
தடுப்பூசி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி
கொள்ள மக்கள் முன் வருகின்றனர். கடந்த ஜூன் மாதங்களில் 279 மாவட்டங்களில் நோய்த்தொற்றால்
பாதித்தவர்கள் எண்ணிக்கை தினசரி 100 ஆக பதிவாகி வந்தது. தற்போது
நோய்த்தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தினசரி 100 ஆக பதிவாகும் மாவட்டங்களின் எண்ணிக்கை 42 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நோய்
தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பெற்று
வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு அதிகமாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் கொரோனா
தாக்கத்தால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரையும் பிற மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் கீழ் இருப்பதாக
கூறப்படுகிறது.
18 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 16 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் 54 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் ஆகஸ்ட் மாதம் மட்டும் 18.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 59.29 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் தினமும் 80 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
0 Response to "இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 54% பேர் – விபரம் வெளியீடு!"
Post a Comment