
உலகளவில் தலைசிறந்த
பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 300 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரு
பல்கலைக்கழகம் கூட இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.
தரவரிசை
பட்டியல்:
உயர்கல்வி குறித்த
அமைப்பின் சார்பில் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்கள் உலக தரவரிசை 2022 எனும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த
பட்டியலில் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தை வைத்து தரவரிசை
செய்யப்படுகின்றது. ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், கட்டுரைகள் வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்டவற்றின்
அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை மாணவர்களின்
நலன் கருதி பல்வேறு அமைப்புகள் வெளியிடுவதை போல 2022 ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உலக தலைசிறந்த
கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் முதல் 300 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரு
பல்கலைக்கழகம் கூட இடம் பிடிக்கவில்லை. இந்தியாவிலிருந்து முதல் பல்கலைக்கழகமாக
ஐஐஎஸ்சி பெங்களூர் மற்றும் ஐஐடி ரோபர் ஆகிய இரண்டும் 301-350
ஆகிய இடங்களுக்குள்
இடம் பெற்றுள்ளன. உலகளவிலான முதல் இடத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக 6வது ஆண்டு முதலிடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த
பல்கலைக்கழகம் அண்மையில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வை மேற்கொண்டது.
401- 450 க்கு ஐஐடி இந்தூர், 501 – 600 அழகப்பா பல்கலை, 601 – 800 ஐஐடி ஐதராபாத் மற்றும் 800 – 1,000 புதிய மூன்று இந்திய பல்கலைகள் இடம் பிடித்துள்ளன. இருப்பினும் இந்திய பல்கலைக்கழகங்கள் ஏதும் முதல் 300 இடங்களுக்குள் வராதது வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் மொத்தமாக இந்த பட்டியலில் உள்ள இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
0 Response to "முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைகள் இல்லை – உலக தரவரிசை வெளியீடு!"
Post a Comment