
நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி முதல் வங்கிகளின் ஏ.டி.எம் கார்டு
பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய கட்டணம்:
இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம் முதல்
வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பான மாற்றங்களை கொண்டுவருவதற்கான புதிய விதிகளை
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்தும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால்
வங்கிகளும் தங்களது வங்கியின் கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அக்டோபர் 1 ம் தேதி முதல் புதிய கட்டணங்களை
அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, வங்கிகளில் புதிய ஏ.டி.எம் கார்டு பெறுவதற்கு
ரூ.300
கட்டணமாக
நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மேலும், நமது வங்கி கிளையில், நமது ஏ.டி.எம் ன் ரகசிய எண்ணை
பெறுவதற்க்ய் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். மெட்ரோ நகரங்களில்
மற்ற வங்கிகளில் 3 முறை இலவச பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆனால் மெட்ரோ அல்லாத பிற
நகரங்களில் 5 முறை இலவச பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். தங்கல்
கணக்கு உள்ள வங்கிகளில் 5 முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் ரூ.10 மற்றும் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
தங்கள் கணக்கு இருக்கும் வங்கிகளில்
பணபரிவத்தனை இல்லா ஏடிஎம் பயன்பாடுகளுக்கு 5 முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு
மேல்,
சேவையை
பயன்படுத்தினால் ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். கூடுதலாக வருடாந்திர ஏ.டி.எம் கார்டு
பராமரிப்பு கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி என்றும் குறுந்செய்தி அனுப்புவதற்கு ரூ.12 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என
மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் அனைத்தும் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய
அரசு அறிவித்துள்ளது.
What is govermet
ReplyDelete