
இந்தியாவில்
30 லட்சம் WhatsApp கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
WhatsApp கணக்குகள்:
உலக
மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் சேர்ப்பதில் சமூக வலைத்தளம் முக்கிய
பங்காற்றி வருகிறது. அதில் முக்கிய பங்கு வகிப்பது WhatsApp.
இந்த
செயலியை பில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்தியாவில் சில
மாதங்களுக்கு முன்பு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தது
இந்த விதிமுறைகளை அனைத்து சமூக வலைத்தளங்களும் பின்பற்ற
வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் புகார்களின்
பேரில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய WhatsApp
கணக்குகள்
கடந்த ஜூன் 16 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது
குறித்து WhatsApp நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் +91 என்ற செல்போன் எண்ணில்
தொடங்கும் 30 லட்சத்து 27 ஆயிரம் WhatsApp கணக்குகள்
முடக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு முடக்கப்பட்ட கணக்குகளில் 95% கணக்குகள் அதிகாரபூர்வமற்ற கணக்குகளாக இருந்ததாக கூறப்படுகிறது. கணக்குகளை முடக்குதல், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல் என 594 புகார்கள் கடந்த ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை குவிந்தது. அவற்றில் 74 புகார்கள் மீது மட்டுமே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் WhatsApp நிறுவனத்தின் சார்பில் கூறப்படுகிறது.
0 Response to "இந்தியாவில் 30 லட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!"
Post a Comment