
புதுச்சேரி
பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து
செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி பேரவையில் அறிவித்துள்ளார். மேலும்
தியாகிகளுக்கான பென்ஷனும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் அறிவிப்பு:
புதுச்சேரியில்
கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதல்வராக
என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு முதல்வர் ரங்கசாமி ஆட்சி பொறுப்பேற்றார்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை
ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த
நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
மேலும் நிதிநிலை அறிக்கைக்காக 10 ஆயிரத்து 100 கோடி மதிப்பீட்டில்
நிதிநிலை அறிக்கை திட்டவரை தயார் செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு
அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி ஏற்று பின்னர் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பின்னர் சட்டப்பேரவை விவாதம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திங்கட்கிழமை காலை
9.34 மணிக்கு தொடங்கியது.
சட்டப்பேரவை விவாதத்தை சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் திருக்குறள் வாசித்து, தொடங்கி வைத்தார். பட்ஜெட் விவாதம் தொடங்கி கடைசி நாளான இன்று பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.மேலும் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என பேரவையில் அறிவித்துள்ளார்.
0 Response to "புதுச்சேரியில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!!"
Post a Comment