செப்.5 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!

Trending

Breaking News
Loading...

செப்.5 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!

செப்.5 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!


நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரும் செப்டம்பர்
5ம் தேதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு:

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளுக்கு முதன்முதலாக சோதனைகளை முடித்து கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு செலுத்தப்படுகிறது, முன்னதாக உற்பத்தி ஆரம்பித்த சில நாட்கள் தான் என்பதால் அனைவருக்கும் செலுத்துவதற்கு போதுமான தடுப்பூசிகள் இல்லை. இதனால் முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டது. இதன் பின்னர், முன்னுரிமை அடிப்படையில் அடுத்தடுத்த கட்டங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பின்னர், போதுமான அளவிற்கு உற்பத்தி அதிகரித்த பின்னர் மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. முதலில் கொரோனா தடுப்பூசி மேல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. இதனால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதன் பின்னர், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை அளித்து வந்தது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தற்போது, நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புகள் குறைந்து நிலைமை சீரடைய தொடங்கி இருக்கிறது.

இதனால் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்கள் அனைத்தும் மீண்டும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் முன்னதாகவே கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா செப்டம்பர் 5ம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பு முகாம்கள் மூலம் காய்கறி விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

0 Response to "செப்.5 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel