தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!

தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!


தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மேலும்
5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ காப்பீடு:

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் வகையில் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத்திற்கு ஆக கூடிய செலவை அரசே ஏற்கிறது. தற்போது தமிழகத்தில் தலைமையேற்றுள்ள அரசு கொரோனா நோயாளிகளும் முதல்வர் காப்பீடு திட்டத்த்தின் கீழ் பயன் பெறலாம் என்று அறிவித்துள்ளது. வருடத்திற்கு 2 முதல் 5 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

மேலும் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிக்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிக்சை குருத்தணு அறுவை சிகிக்சை, குருத்தெலும்பு அறுவை சிகிக்சை போன்ற அறுவை சிகிக்சை செய்யப்படுகிறது. இந்த திட்டம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் சேர விரும்புபவர்கள் ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. ஆதரவற்ற முதியவர்கள், இலங்கை அகதிகள் போன்றோரும் பயன்பெறலாம். தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

0 Response to "தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel