
தமிழகத்தில் கொரோனா
தொற்றின் 2ம் அலை பரவல் காரணமாக தடை
செய்யப்பட்டிருந்த சுற்றுலா தளங்களில் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா
அனுமதி:
தமிழகத்தில் கடந்த
மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு
கடந்த மே 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தீவிர
ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. தீவிர கட்டுப்பாடுகளின் போது
மாநிலம் முழுவதும் அத்தியாவசிய பணிகள் மட்டுமே நடந்து வந்தது. பொதுமக்கள் வெளி
இடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால்
தமிழகத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது.
இதனால் தமிழக அரசு சில தளர்வுகளை வரிசையாக அறிவித்து வருகிறது. கடந்த
மாதம் முதல் குறிப்பிட்ட சுற்றுலா தளங்களுக்கு என்று உரிய பாதுகாப்பு விதிமுறைகளை
அறிவித்து அனுமதி அளிக்கப்பட்டது. ஆயினும், குறிப்பிட்ட பகுதிகளில் சுற்றுலாவை அரசு
அனுமதிக்கவில்லை. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் ஆறு
மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் உலக சுற்றுலாத் தினத்தையொட்டி இன்று
அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் வழக்கமாக அங்கு நடைபெறும், ஆயில் மசாஜ் மற்றும் அருவியில் பயணிகள் குளிக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. பரிசல் சவாரி நடந்து வந்தது. பரிசலில் சென்று பொம்மச்சிக்கல், ஐந்தருவி, மணல்திட்டு, கர்நாடக எல்லை போன்ற பகுதிகளை பார்க்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கடந்த 6 மாதங்கள் கழித்து சுற்றுலா அனுமதி அளிக்கப்படும் பல சேவைகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருத்தத்துடன் சென்றனர்.
0 Response to "6 மாதங்களுக்கு பின்னர் ஒக்கேனக்கலில் சுற்றுலா – அரசு அனுமதி!"
Post a Comment