தமிழகத்தில் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – அறநிலையத்துறை அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – அறநிலையத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – அறநிலையத்துறை அறிவிப்பு!


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் பயிற்சி பள்ளியில் சேர விரும்பும் நபர்கள் தங்களது விண்ணப்பங்களை அக்டோபர்
27ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர் படிப்பு

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வார இறுதி நாட்கள் தவிர மற்ற 4 நாட்களும் மத வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் கீழ் முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக 4 மாதங்கள் கழித்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் இலவச தரிசனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை கோவிலில் அர்ச்சகர் படிப்புக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட இருப்பதால், அதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ‘திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை அக்டோபர் 27ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.

இப்படிப்புக்கு 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 20 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கு தேர்ச்சி பெறும் நபர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை மற்றும் ரூ.3,000 உதவித்தொகையுடன் கூடிய மூன்று ஆண்டுகால சான்றிதழ் படிப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் சமய தீட்சை பெற்றவர்கள், சமயக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களும் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Response to "தமிழகத்தில் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – அறநிலையத்துறை அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel