
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக
இருக்கும் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்காக அதற்குரிய விவரங்களை அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வி இணை
இயக்குநர் அறிவித்துள்ளார்.
காலிப்பணியிட விவரம்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசு
பணிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அரசு சில
அறிவிப்புகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
காலியாக இருக்கும் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான காலிப்
பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் புதிய அறிவிப்புகளை
வெளியிட்டுள்ளார்.
அதாவது தமிழகத்தில் கடந்த சில
வாரங்களுக்கு முன்னதாக TRB தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்புகள்
கொடுக்கப்பட்டது. அந்த வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் தேர்வுகள் மூலமாக அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்களின்
காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.
இதனால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
காலியாக இருக்கும் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்களின் காலிப்பணியிட
விவரங்களை அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து vacatianaltn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட
தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கையொப்பமிட்ட அந்த காப்பியை Scan செய்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Response to "தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!"
Post a Comment