
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம்
தற்போது 2,207
காலிப்பணியிடங்களுக்கான
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பில் வயது வரம்பு 40 என்று குறிப்பிட்டுள்ளது. இத்தேர்வை
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்:
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம்
மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடந்த 2013ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியின் போது
டி.இ.டி தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு அத்தேர்வின் அடிப்படையில் இளநிலை பட்டதாரி
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் டி.ஆர்.பி அடிப்படையில் முதுநிலை
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இத்தகைய டி.இ.டி தேர்வில் 60% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்று
அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்வில் அதிக அளவிலான தேர்வர்கள் 60% மதிப்பெண் தேர்ச்சி பெற்றதால் மதிப்பெண்
அடிப்படையில் பணி நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் தேர்ச்சி பெற்ற பெரும்பாலானோர்
பணி நிர்ணயம் செய்யப்படாததால் தனியார் பள்ளிகளில் வேலை பார்த்து கொண்டு
டி.ஆர்.பிக்கு தங்களை தயார்படுத்தி வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவலின்
காரணமாக அரசுப்பணி சார்ந்த எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில்
இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டி.ஆர்.பி 2,207 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி அக்.17 என்றும், வயது வரம்பு 40 என்றும், நவ.13, 14, 15 ஆகிய மூன்று தேதிகளில் தேர்வு நடைபெற இருப்பதாகவும்
இத்தகைய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இத்தகைய வயது வரம்பானது கடந்த இரண்டு
ஆண்டுகளில் 40 வயதை கடந்துள்ள நிலையில் ஆசிரியர் ஆகும் கனவோடு இத்தேர்வை எதிர்பார்த்து
டி.ஆர்.பி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி காத்துக் கொண்டிருந்த அனைவருக்கும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்
தேர்விற்கு வயது வரம்பு 55 என்று இருக்கையில் மாநில அரசின் டி.ஆர்.பிக்கு
வயது வரம்பு 50 என்று மாற்றினால் அதிக அனுபவமும், திறமையும் உடைய அரசு ஆசிரியர்கள்
தமிழகத்திற்கு கிடைப்பார்கள் என்று பெரும்பாலானோர் தமிழக அரசிடம் கோரிக்கையாக
வைத்துள்ளனர். இவர்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "TN TRB தேர்வு அறிவிப்பு – வயது வரம்பு பிரச்சனைகள்! TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு?"
Post a Comment