TN பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Trending

Breaking News
Loading...

TN பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

TN பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!


தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்
2 துணைத்தேர்வு விடைத்தாள்கள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

+2 துணைத்தேர்வு:

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள்களின் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், தேவைப்படும் மாணவர்கள் அக்.4 முதல் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் கூறியதாவது,

ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணை தேர்வெழுதி விடைத்தாள்கள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 01.10.2021 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணி முதல் 05.10.2021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்திற்கு சென்று Notification-ஐ கிளிக் செய்தவுடன் தோன்றும் HSE Second Year Supplementary Exam, Aug 2021 – Scripts Download” என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்கள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட மறுகூட்டல் II அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்சத்தில் அதே இணையதளத்தில் உள்ள Notification பக்கத்தில் “Application for Retotaling / Revaluation” என்ற தலைப்பை கிளிக் செய்து வேற்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 04.10.2021 (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 05.10.2021 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.00 மணிக்குள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

கட்டண விவரம்:

·         மறுமதிப்பீடு

·         பாடம் (ஒவ்வொன்றுக்கும்) – ரூ. 505/-

மறுகூட்டல்-II

·         உயிரியல் பாடம் மட்டும் – ரூ.305/-

·         ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) – ரூ.205/-

0 Response to "TN பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel