
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த
பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது
வெளியிட்டுள்ளது.
பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம்:
தமிழகத்தில் அரசுத்துறை கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர் குடியிருப்புகள் போன்ற கட்டிட
பணிகளுக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் பல நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. கட்டிட
பணிகளுக்கு அரசால் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு
இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் பேக்கேஜ் டெண்டர் என்ற
புதிய முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சம் கோடி
ரூபாயில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஒரே டெண்டராக பெரிய நிறுவனங்களிடம்
வழங்கப்பட்டது.
இந்த நடைமுறை மூலம் சிறிய ஒப்பந்ததாரர்கள்
வேலை மற்றும் வருவாய் இழப்பிற்கு ஆளாகினர். இதனால் பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து
செய்ய வேண்டும் என்று சிறிய நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை
முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீது
சட்டசபை விவாதத்தில் பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்யப்படும் என்று
பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கு ஒரே நிறுவனங்களுக்கு டெண்டர் விடுபடாமல் தனித்தனியாக அரசு டெண்டர்கள் விடப்படும். ஒரு பணிக்கு ஒரு டெண்டர் என்றும் ஒரு ஒப்பந்ததாரர் என்ற முறை அமலுக்கு வருவதால் அதிகமானோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "தமிழக அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு – பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து!"
Post a Comment