
இந்திய ரிசர்வ் வங்கியானது அலகாபாத் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் வங்கி
போன்ற வங்கிகளின் காசோலைகள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் செல்லாது என்று
எச்சரித்துள்ளது.
காசோலைகள் செல்லாது:
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள
அனைத்து வங்கிகளுக்கும் குறிப்பிட்ட தனித்தனியான காசோலை புத்தகம் உள்ளது. ஒரு
குறிப்பிட்ட வங்கியின் பங்கு முதலீடுகள் குறையும் போதும், வங்கியின் பொருளாதார சிக்கல் காரணமாகவும்
ஒரு வங்கி மற்றொரு பெரிய வங்கியின் நிர்வாகத்தின் கீழ் மாற்றம் அடைகிறது. இப்படி
மாறும் போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியின்
பழைய பெயரிலேயே அனைத்து பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படும்.
அந்த வகையில் அலகாபாத் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் வங்கி
ஆகிய வங்கிகளின் காசோலைகளை பயன்படுத்துவோர் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு
விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வங்கிகளை சேர்ந்த பழைய
காசோலை புத்தகம் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் செல்லாது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும்
யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி)
இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியன் வங்கி தனது
அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்களுக்கான காசோலை புத்தகம் குறித்து தனது
அதிகாரப்பூர்வ டிவீட்டர் தளத்தில், பழைய அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் இந்தியன்
வங்கியுடன் தடையற்ற வங்கி அனுபவத்தை தொடர்ந்து அனுபவிக்க புது காசோலை புத்தகத்தை
பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
அலகாபாத் வங்கி
வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் அல்லது நேரடியாக வங்கி கிளைக்கு
சென்று புதிய காசோலையை பெற்றுக் கொள்ளலாம்.
இதேபோல், பிஎன்பி தனது ஓரியண்டல் பேங்க் ஆஃப்
காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட
PNB
IFSC மற்றும் MICR உடன் PNB காசோலை புத்தகத்தை பெற்றுக் கொள்ள
அறிவுறுத்தியுள்ளது. இதைத்தவிர, சிண்டிகேட் வங்கி கனரா வங்கியாகவும், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கி
பாரத ஸ்டேட் வங்கிக்கு பிறகு இரண்டாவது பெரிய இந்திய வணிக வங்கியாக மாறியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
0 Response to "அக்.1 முதல் ‘இந்த’ 3 வங்கிகளின் காசோலை செல்லாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!"
Post a Comment