தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை அமல் – கொண்டாடும் காவலர்கள்!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை அமல் – கொண்டாடும் காவலர்கள்!

தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை அமல் – கொண்டாடும் காவலர்கள்!


தமிழகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக் கண்ணன் கூறியுள்ளார்.

வார விடுப்பு:

நாடு முழுவதும் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல்துறை இன்றி அமையாத பல சேவைகளை செய்து வருகின்றது. ஆனால் அவர்களுக்கான போதிய விடுப்புகள் மற்றும் வேலை நேரம் முதலியன வரையறுக்கப்படாமல் உள்ளது. இதனால் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி திருநெல்வேலி மாநகருக்கு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வருகை புரிந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அதனை தொடர்ந்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார். ஓய்வில்லாமல் வேலை பார்ப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாநகர ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்புக்குச் சென்ற அவர் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் படிப்பு மற்றும் விளையாட்டு முதலியன குறித்தும் காவலர்களின் குடும்பத்தினரிடம் அவர்களின் குறைகள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

ஓய்வில்லாமல் உழைப்பதால் மன உளைச்சல் அடைவதாக குடும்பத்தினர் கூறியதை அடுத்து வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து திங்கட்கிழமை காவலர்களுக்கு வார விடுப்பு வழங்கப்பட்டது. வார விடுப்பு எடுத்தாலும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது என கோரப்பட்டுள்ளது. முதல் நாளில் 50 போலீசார் விடுப்பு எடுத்துள்ளனா் என மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

0 Response to "தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை அமல் – கொண்டாடும் காவலர்கள்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel