
பிறந்த குழந்தை முதல் ஆதார் அட்டை
அவசியமாகி விட்ட நிலையில், குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் வழிமுறைகள் மற்றும் அதற்கு தேவையான
சான்றுகள் என்று முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
நீல ஆதார்:
நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தனித்தனியாக 12 இலக்க அடையாள எண்களை வழங்கியுள்ளது. அனைத்து
முக்கிய பணிகளுக்கும் ஆதார் எண் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்நிலையில், பிறந்த குழந்தைகளுக்கு என்று UIDAI
ஆணையம் நீல ஆதார்
வழங்குகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தையின் மருத்துவமனை
டிஸ்சார்ஜ் சான்றிதளுடன் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளின் பிறந்த சான்றிதழ் வரும்
வரை காத்திருக்க தேவையில்லை. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கைரேகை மற்றும் கருவிழி
பதிவு தேவையில்லை. புகைப்படம் மட்டுமே போதுமானதாகும்.
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
குழந்தை ஆதார் விண்ணப்பிக்க பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் கார்டு அல்லது பொது விநியோக அமைப்பு
புகைப்பட அட்டை, வாக்காளர் ஐடி, ஆயுத உரிமம், இந்திய அரசு வழங்கிய புகைப்பட அடையாள சான்று, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால்
வழங்கப்பட்ட புகைப்பட அடையாள சான்று போன்ற 34 வகையான சான்றிதழை அரசு அனுமதித்துள்ளது.
முக்கிய சான்றுக்கான ஆவணங்கள்:
3 மாத பழைய மின்சார பில், தண்ணீர் பில் 3 மாதங்களுக்கு மேல், டெலிபோன் லேண்ட்லைன் பில், வீட்டு வரி ரசீது, கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட், இன்சூரன்ஸ் பாலிசி போன்ற 34 வகையான ஆவணங்களை அரசு சமர்ப்பிக்க அனுமதி
அளித்துள்ளது. முக்கிய ஆவணங்கள் குறித்த முழு விவரங்களையும் UIDAI
ன் அதிகாரபூர்வ
இணையத்தளத்தில் அறிந்து கொள்ளாலாம்.
குழந்தை ஆதார் பெறும் வழிமுறைகள்:
·
முதலில் UIDAI.gov.in ன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல
வேண்டும்.
·
இப்பொழுது, ஆதார் கார்ட் ரெஜிஸ்ட்ரேஷன் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
·
பின்னர், குழந்தையின் பெயர் மற்றும் பிற பயோமெட்ரிக் தகவல்கள் போன்ற தேவையான
அனைத்து தகவலையும் பதிவு செய்ய வேண்டும்.
·
இப்பொழுது, உங்கள் வீட்டு முகவரி பகுதி, மாநிலம் போன்ற தகவல்களை பதிவு செய்து
சமர்ப்பிக்க வேண்டும்.
·
ஆதார் அட்டைக்கான பதிவு அட்டவணைக்கு சம்மதம் அறிவித்து அதற்கான தேர்வை
தேர்வு செய்ய வேண்டும்.
· இனி, உங்கள் அருகியிலுள்ள ஆதார் மையத்திற்கு உங்களின் வருகை நேரம் மற்றும் தேதியை பதிவு செய்து சான்றை பெற்றுக் கொள்ளலாம்.
0 Response to "பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை – எளிய வழிமுறைகள் இதோ!"
Post a Comment