
வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது டெபிட் கார்டு
வாடிக்கையாளர்கள், அமேசான் தளத்தில் ஷாப்பிங் செய்வதற்கான 10% தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
தள்ளுபடி அறிவிப்பு
இந்த பண்டிகை காலத்தில் அதிகளவு
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சில முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் போட்டிபோட்டுக்
கொண்டு பலவிதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. தற்போதுள்ள காலங்களில், கடைகளுக்கு சென்று பிடித்த பொருட்களை
தேடிப்பிடித்து வாங்கும் ஆர்வம் மக்களிடையே வெகுவாக குறைந்துள்ளது. அதற்கு மாறாக
விருப்பமான பொருட்களை வீட்டில் இருந்தபடியே தேர்வு செய்து அவற்றை வீடுகளுக்கே
வந்து கொடுக்கும் இ-காமர்ஸ் தளங்கள் மக்களிடையே பிரபலமாகியுள்ளது.
அந்த வகையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு
மக்கள் ஷாப்பிங் செய்வதற்காக சில முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பலவகையான
சலுகைகளை வெளியிட்டு வருகின்றன. இதனுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கி
சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வரும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) நிர்வாகம், வரவுள்ள பண்டிகைக் காலத்தை SBI டெபிட் கார்டு சலுகைகள் மூலம் அமேசானுடன்
இணைந்து கொண்டாடும் படி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது.
அதாவது SBI மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு அல்லது SBI
DC EMI உள்ள
வாடிக்கையாளர்கள் அமேசான் செயலி அல்லது amazon.in என்ற இணையதளத்தில் குறைந்தபட்சம் ரூ.1500 க்கு 10 சதவீதம் தள்ளுபடி பெறுவார்கள் என
குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக SBI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ‘உங்கள் பண்டிகை காலத்தை புத்தம் புதிய
ஸ்டைலுடன் கொண்டாடுங்கள். உங்களுக்குப் பிடித்த காலணிகள், கடிகாரங்கள், ஆடை, நகை பொருட்களை அமேசானில் வாங்கினால் 10% வரை அற்புதமான தள்ளுபடி கிடைக்கும்’ என தெரிவித்துள்ளது.
இந்த சலுகை செப்டம்பர் 30, 2021 வரை செல்லுபடியாகும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த சலுகை செப்டம்பர் 30 உடன் முடிவடைந்தாலும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் தொடங்குகிறது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தவிர HDFC வங்கி டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI ஆகியவற்றின் வாடிக்கையாளர்களுக்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் திட்டத்தில் 10% வரை தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "SBI வங்கியின் டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அமேசானில் 10% தள்ளுபடி!"
Post a Comment