இந்தியாவில் 7 முதல் 11 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி!

Trending

Breaking News
Loading...

இந்தியாவில் 7 முதல் 11 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் 7 முதல் 11 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி!


இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சியாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் 18 வயது மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றிலிருந்து காக்கிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் தடுப்பூசி பயன்பட்டால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

அதனால் மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூன்றாம் அலை கொரோனா பரவும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் இந்த மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதனை தடுக்கும் முயற்சியாக 12 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அவசரக் கால தடுப்பூசி சோதனைகளை நடத்தியது. இதில் 100 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வெற்றி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை நடத்த மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம் சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

0 Response to "இந்தியாவில் 7 முதல் 11 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel