தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு? ஐகோர்ட் தள்ளுபடி!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு? ஐகோர்ட் தள்ளுபடி!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு? ஐகோர்ட் தள்ளுபடி!


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை
60-ஆக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் உத்தரவு:

தமிழகத்தில் இதுவரை அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 என்றிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ஓய்வு பெறும் வயது 1 வருடம் உயர்த்தி தமிழக அரசால் 60- ஆக மாற்றப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரியும், இதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரை சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார். அவ்வாறு தொடங்கப்பட்ட வழக்கிற்கு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் இருந்துவந்தது.

மேலும் இது தொடர்பாக மதுரையில் சமீபத்தில் மாநில அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களிடம் மாநில அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கவிருப்பதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. இத்தகைய உயர்நீதி மன்றத்தின் முடிவு அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Response to "தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு? ஐகோர்ட் தள்ளுபடி!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel