7.5% இட ஒதுக்கீடு: பி.இ. மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

Trending

Breaking News
Loading...

7.5% இட ஒதுக்கீடு: பி.இ. மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

7.5% இட ஒதுக்கீடு: பி.இ. மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

 


7.5
சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நிகழ்ச்சியில் பேசியதாவது, அரசுப் பள்ளி மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று.

 

மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். கல்விச் செல்வம் என்றும் அழியாத செல்வம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

 

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்வதன் மூலம் 11,390 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் நுழைவுத்தேர்வை ரத்து செய்து கிராமப்புற மாணவர்களுக்கு உதவியது  திமுக அரசு.

 

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது என்று முதல்வர் கூறினார்.

0 Response to "7.5% இட ஒதுக்கீடு: பி.இ. மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel