பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு

Trending

Breaking News
Loading...

பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு

பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்
2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. 


 கல்வி தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும். வேலைவாய்ப்பு பதிவு பணி, அந்தந்த பள்ளிகளிலேயே வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும். பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக்கும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படும். 


மேலும் www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ள லாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த வசதியை தவறாமல் பயன் படுத்திக் கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரி வித்துள்ளார்.

0 Response to "பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel