
கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டதில் புகை பிடிப்பவர்களுக்கு நோய்த்தொற்று தாக்கம் அதிகமாக
இருக்கும் என ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு:
2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று உலகம்
முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து
வந்தது. சீனாவில் உருவான கொரோனா வைரஸானது 200க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது
குறிப்பிடத்தக்கது. உலகை உலுக்கிய கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய
செய்துள்ளது.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்
ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆய்வு மேற்கொண்டனர். இந்த
ஆய்வில் கூறப்பட்டதாவது 4 லட்சத்து 21 ஆயிரத்து 469 பேரை ஆராய்ந்ததில் புகை பிடிப்பதற்கும், கோவிட் பாதிப்பு தீவிரம் அடைவதற்கும் தொடர்பு
இருப்பது தெரிய வந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புகைபிடிப்பவர்கள் மற்றும் புகைபிடிக்காதவர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது கொரோனா தொற்றால் தாக்கப்பட்ட நிலையில் புகை பிடிப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான தேவை 80% அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உயிரிழக்கவும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட இதுவே ஏற்ற தருணம் என கூறப்படுகிறது.
0 Response to "புகை பிடிப்பவரா நீங்கள்? அப்போ 80% கொரோனா தாக்கும் – ஆய்வு முடிவுகள்!"
Post a Comment