
ஓய்வூதியம்
பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் ஓய்வூதியதாரர்கள் இனி
பென்சன் அமைப்பிடம் சென்று ஆயுள் சான்றிதழ் செலுத்தத்தேவையில்லை என்றும் இந்த
சேவைகளை இனி டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள்
சான்றிதழ்
ஓய்வுபெற்ற
அரசுத்துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கு
ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த ஆயுள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் பென்சன் அமைப்பிடம் செலுத்த வேண்டும். அதாவது
ஓய்வூதியதாரர்கள் தங்கள் இருப்பு ஆதாரத்தை அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் தான்
இந்த ஆயுள் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டு வருகிறது.
அப்போது தான் எவ்வித தடங்கலும் இன்றி பயனர்கள் ஓய்வூதியத்தை
பெற்றுக்கொள்ள முடியும். இப்போது இந்த ஆயுள் சான்றிதழை ஊழியர்கள், எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீடுகளில்
இருந்தபடியே ஆன்லைனில் செலுத்திக்கொள்ள புதிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தபால் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு செல்லத்
தேவையில்லை.
அதற்காக ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை பெறும்
வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஓய்வூதியதாரர்கள் தங்களது
ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெற்றுக்கொள்ள முதலில் https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதளத்தில் உள்நுழைந்து கணக்குகளை
பதிவு செய்ய வேண்டும். பிறகு மொபைல் எண் மூலமாக அடையாள சான்றிதழை பெற வேண்டும்.
தொடர்ந்து அந்த இணையதள முகவரியை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சேவையை பெற்றுக்கொள்ள பயனரின் ஆதார் அட்டைகள் அவசியமாகும். குறிப்பாக அந்த ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதே சமயம், ஓய்வூதியம் வழங்கும் வங்கி அல்லது தபால் நிலைய கணக்குடன் பயனரின் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Response to "மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு!"
Post a Comment