
முதலமைச்சரின்
தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கூட்டுவதால்
அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கருதி தமிழக அரசு மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை
அறிவித்துள்ளது
அரசின் வேண்டுகோள்:
முதல்வரின் தேர்தல்
பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட
மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும்
பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.
இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால்
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் தினமும் ஆயிரக்கணக்கான
மனுக்களை அளிப்பதற்காக மக்கள் கூடுகின்றனர். இங்கு பெறப்படும் மனுக்கள்
சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
மக்கள் தங்களின் பலவிதமான
கோரிக்கைகளுடன் நீண்ட வரிசையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க
காத்து நிற்கின்றனர். இதை, முதியோர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்
மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பலரும் உள்ளனர். தற்போது கொரோனா பரவல் தமிழகத்தில்
கட்டுக்குள் இருந்தாலும், இது போன்ற சூழ்நிலைகளில்
தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக
பின்பற்றாமல் உள்ளனர்.
முதல்வரின் தனிப்பிரிவில்
நேரடியாக மட்டுமல்லாமல் தபால் மற்றும் இணையம் மூலமாகவும் மனுக்கள்
பெறப்படுகின்றது. எந்த வழியில் மனுக்கள் பெறப்பட்டாலும் ஒரே மாதிரியாக தான்
நடைமுறை படுத்தப்படும். இதனால் கொரோனா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைக்
கடைபிடிக்கும் வகையில், முதலமைச்சரின்
தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக ஆயிரக்கணக்கில்
கூடுவதைத் தவிர்த்து இணையவழிச் சேவைகளைப் பயன்படுத்தி மனுக்களை அளிக்குமாறு தமிழக
அரசு அறிவித்துள்ளது.
0 Response to "முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக மனு அளிப்பதை தவிர்க்க வேண்டுகோள் – தமிழக அரசு அறிக்கை!"
Post a Comment