ZOOM நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி – பள்ளி, அலுவலக திறப்பு எதிரொலி!

Trending

Breaking News
Loading...

ZOOM நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி – பள்ளி, அலுவலக திறப்பு எதிரொலி!

ZOOM நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி – பள்ளி, அலுவலக திறப்பு எதிரொலி!


ஊரடங்கு காலத்தில் பல வகைகளில் உதவியாக இருந்த வந்த ஜூம் செயலி நிறுவனத்தின் பங்குகள் திடீரென்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

ஜூம் செயலி:

கரோனா தாக்கத்தின் நடுவே, அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ‘ஜூம் செயலி அமைந்தது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஜூம் செயலி, பாடம் நடத்துவது முதல் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது. இதனால் ‘ஜூம்செயலி மிகவும் பிரபலம் அடைந்தது. இணையத்தில் வீடியோ சந்திப்பு வசதியை வழங்கும் சேவைகள் பல உள்ள போதிலும் ஜூம் செயலி மட்டும் தனித்துநின்று பிரபலமானதற்கு இதன் எளிமையே முக்கிய காரணம் ஆகும். யார் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஜூம் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த செயலி பயன்பாட்டில் இருந்தாலும், ஊரடங்கு காலத்தில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஜூம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் 2019 டிசம்பர் வரை அவ்வளவு சிறப்பான நிலையில் இல்லாமல் இருந்தது. 2019ம் ஆண்டு பங்கு சந்தையில் ஒரு பங்கின் விலை 70 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. திடீர் பிரபலத்தினால் மளமளவென உயர்ந்து ஒரு பங்கு 559 டாலராக விற்பனை செய்யப்பட்டது. அப்போதைய நிலையில், நிறுவனத்தின் மொத்த மதிப்பு 12 லட்சம் கோடியாக இருந்தது.

தற்போது, பரவலாக கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் அலுவகங்களில் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறந்து செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் ஜூம் செயலியின் பயன்பாடு குறைந்து விடும் என்று அஞ்சிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கியுள்ளனர். இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் ஆகஸ்ட் 31ம் தேதியான நேற்று ஒரே நாளில் 15% வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது நிறுவனத்தின் மொத்த பாதிப்பு ரூ.6.2 லட்சம் கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Response to "ZOOM நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி – பள்ளி, அலுவலக திறப்பு எதிரொலி!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel