தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!


தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலச் செயலாளா் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு :

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 15 ம் தேதி வரை தூய்மையான நிகழ்வுகள்-2021 என்ற திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த மாதத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 18 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்கள் எழுத்துக்களையே மறந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலச் செயலாளா் மாணவர்களின் கல்வி நிலை கருதி 1 முதல் 8 வரை பள்ளிகள் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஆசிரியர்களின் உயர்வு பொது மாறுதல் கலந்தாய்வை ஆன்லைனில் உடனடியாக நடத்த வேண்டும். 3.40 லட்சம் மாணவர்களின் கல்வி நலனை கருதி, கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். செப்டம்பர் 15க்கு பிறகு நடுநிலை, ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Response to "தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel