இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – 3வது தவணை அவசியமா?

Trending

Breaking News
Loading...

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – 3வது தவணை அவசியமா?

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – 3வது தவணை அவசியமா?


இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் தடுப்பூசிகள்
2 டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இப்போது மற்ற நாடுகளை போல இந்தியாவிலும் 3 ஆவது டோஸ் தடுப்பூசி அவசியமா என எழுந்துள்ள கருத்துக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாக தடுப்பூசிகள் கருதப்படுகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. அதாவது முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் உடலில் 30 முதல் 35 சதவீதம் வரையிலும் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. ஆனால் 2 ஆவது டோஸ் தடுப்பூசிக்கு 90%க்கும் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாவதாக ஆய்வு தகவல்கள் கூறுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி தொடர்பிலான ஒரு புதிய அச்சம் உருவாகியுள்ளது. அதாவது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த செய்திகள் தடுப்பூசிகள் மீதான உறுதித் தன்மையை பாதித்துள்ளது. மேலும் டெல்டா பிளஸ் மாறுபாடு வகையிலான கொரோனா வைரஸ்களை இந்த தடுப்பூசிகள் கட்டுப்படுத்தாதது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் 3 ஆவது டோஸ் தடுப்பூசி அவசியமா எனும் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நிபுணர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதன் படி இந்தோனேசியா நாட்டில் மருத்துவர்களுக்கும், இஸ்ரேல் நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அமெரிக்காவில் பொது மக்களுக்கும் 3 வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு நாட்கள் செல்ல செல்ல நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என நச்சு உயிரியல் வல்லுநர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா களப்பணியில் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி அவசியம் என மருத்துவர் சாந்தி கூறியுள்ளார்.

தவிர உடலில் இணை நோய் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், இதய நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட பாதிப்புகளை உடையவர்களுக்கு 3 வது டோஸ் தடுப்பூசி அவசியம் என்பது மற்ற அனைவரின் கருத்தாகும். எனவே இதற்குரிய ஆய்வுகளை மேற்கொண்டு இந்தியாவிலும் 3 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு ICMR நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 Response to "இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – 3வது தவணை அவசியமா?"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel