![]() |
மத்திய
பல்கலைக்கழகங்களில் கல்லூரி படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுவான CUCET 2021க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக
தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
விண்ணப்ப பதிவு:
நாடு
முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேர்க்கைக்கு CUCET என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2021-2022 ஆம் ஆண்டுக்கான CUCET நுழைவுத்தேர்வு ஜூன்
மாதத்தில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் முன்னதாக அறிவித்தது. ஆனால்
ஜூன் மாதத்தில் கொரோனா தொற்றின் அச்சம் அதிகமாக இருந்ததால் நாடு முழுவதும்
திட்டமிட்டிருந்த பல முக்கிய தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டது.
CUCET நுழைவுத்தேர்வு கணினி
வழியில் 2 மணி நேரத்திற்கு நடத்தப்படும். தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு
தவறான பதில் ஒன்றுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும்
வழிமுறை உள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் நுழைவுத் தேர்வை முதல்கட்டமாக தமிழ்நாடு
மத்திய பல்கலைக்கழகம் உட்பட12 மத்திய பல்கலைக்கழகங்களில்
சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அறிவித்தது. தற்போது CUCET பொது நுழைவுத்தேர்வு செப்டம்பர் மாதம் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு
ஆகஸ்ட் 16ம் தேதி முதல் தொடங்கியது.
விண்ணப்பிக்க செப்டம்பர் 2ம் தேதி இறுதி நாள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோர், தங்களுக்கு ஏற்ற படிப்புகளை
தேர்வு செய்து செப்டம்பர் 5ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தமான் மற்றும் நிகோபர்
போர்ட் பிளேர் மற்றும் கேரளாவில் காசர்கோடு ஆகிய 2 இடங்களில் புதிதாக தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான கூடுதல்
தகவல்களை cucet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Response to "CUCET 2021 நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு – செப்.5 வரை கால அவகாசம் நீட்டிப்பு!"
Post a Comment