ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – பள்ளிகள் மூடல்! தூத்துக்குடியில் பரபரப்பு!

Trending

Breaking News
Loading...

ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – பள்ளிகள் மூடல்! தூத்துக்குடியில் பரபரப்பு!

ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – பள்ளிகள் மூடல்! தூத்துக்குடியில் பரபரப்பு!


தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில்
, தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்ந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கொரோனா:

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த ஜனவரி மாதவாக்கில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களான 10, 12 மற்றும் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்த ஒரு மாத கால அளவிற்குள்ளாகவே பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பள்ளி என்பது நெருக்கமான சூழல் என்பதால் தொற்றின் சங்கிலி அதிக வேகத்தில் இருந்தது.

இதனால் பள்ளிகள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இதனால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உட்பட எந்த தேர்வுகளும் நடத்தாமல் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2021- 2022 கல்வியாண்டு தொடங்கப்பட்டு வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆலோசனை நடந்தது. தீவிர ஆலோசனை மற்றும் முன்னேற்பாடு பணிகளுக்கு பின்னதாக தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்தது.

பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அரசு பல விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வெளியிட்டு அதனை அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க அறிவுறுத்தியது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என்று அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. திட்டமிட்டபடி இன்று தமிழகத்தின் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பள்ளி இன்று திறக்கப்படவில்லை.

0 Response to "ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – பள்ளிகள் மூடல்! தூத்துக்குடியில் பரபரப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel