
தமிழகத்தில் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே தொழிற்கல்வி படிப்புகளில் சேருகின்றனர். இதற்கான ஆய்வை நடத்தி தற்போது தமிழக அரசு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக
அரசு ஆணை:
தமிழகத்தில்
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
பொறியியல்,
வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில்
கடந்த ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை
வகிக்கும் சுயநிதி கல்லூரிகளில் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது.
தொழிக்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர தடையாக இருப்பது எது மாதிரியான காரணம்
என்று கண்டறிய அரசு தனி ஆணையம் ஒன்றை நியமித்தது.
இந்த ஆணையம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையாக
தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இதன் அடிப்படையில் பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில்
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும்
மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த வாரம் சட்டப்பேரவையில் நிறைவேறியது. 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற
மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள். நடப்பு ஆண்டிலேயே இந்த 7.5% உள் இட ஒதுக்கீடு அமலுக்கு வர இருப்பதாக
அரசு ஆணையினை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த உள் ஒதுக்கீட்டை தவிர்த்து அரசின் பிற
ஒதுக்கீட்டிற்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் தகுதியுடையவர்களாகவே கருதப்படுவர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்னுரிமை ஒதுக்கீட்டில் தேவையான
அளவு மாணவர்கள் இடம் நிரப்பப்படாமல் இருந்தால் அந்த இடங்களில் தனியார் பள்ளி
மாணவர்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் இட ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!"
Post a Comment