
இந்தியாவில் புதிய வகையான டெங்கு நோய் பரவி வருவதாக மத்திய அரசு
அனைவரையும் எச்சரித்து வருகிறது. அதற்கான அறிகுறிகளையும் வெளியிட்டு உள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று
ஏற்பட்டது. உலகையே உலுக்கிய இந்த நோய் தொற்றினால் இந்தியாவில் லட்சக்கணக்கில்
உயிரிழப்புகள் ஏற்பட்டது. மேலும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அதனால் முழு
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நாடே முடங்கியது. பின்னர் படிப்படியாக மீண்டு
பொருளாதாரத்தை சீர்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும்
இரண்டாம் அலை தீவிரமாக பரவியதால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
முதல் அலையை விட இரண்டாவது அலையிலேயயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. தடுப்பூசி
செலுத்துவதை துரிதப்படுத்திய மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தற்போது இரண்டாம்
அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. ஆயினும் மூன்றாவது அலைக்கான அறிகுறிகள்
அவ்வப்போது தென்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் தற்போது புதிய டெங்கு வைரஸ் பரவி வருவதாக நடுவண்
அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே டெங்கு வைரசால் தமிழ்நாடு பெருமளவு பாதிக்கப்பட்டு
உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமே இன்னும் மறையாத நிலையில் டெங்கு பரவல்
மக்கள் மத்தியில அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களிலும் ஒரு சில வடமாநிலங்களிலும் பரவி
வருகிறது. எனவே அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் 11 மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். அவற்றிற்கான அறிகுறிகளை
மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
அறிகுறிகள்:
1.அடிவயிற்றில் வலி
2.வாந்தி அல்லது மலத்தில் இரத்தம்
3.குமட்டல், வாந்தி (1 நாளில் குறைந்தது 3 முறை)
4.கண்கள், தசைகள், எலும்பு மூட்டு வலி
5.சோர்வடைந்த, அமைதியற்ற
அல்லது எரிச்சலூட்டும்
0 Response to "இந்தியாவில் வேகமெடுக்கும் புதிய வகை டெங்கு – அறிகுறிகள் என்னென்ன? மத்திய அரசு எச்சரிக்கை!"
Post a Comment