
குறைந்தபட்சம் 1
டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே
கொடைக்கானலில் அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால்
சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் சுற்றுலா:
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் கொரோனா 2ம் அலை பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது.
இதனால் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. தற்போது 2ம் அலை பரவல் குறைந்துள்ளதை அடுத்து மக்கள் அனைவரும் தடுப்பூசி
செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் அதிகமாக
கூடும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது வரை நீடிக்கப்ட்டு தான்
வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய டூரிஸ்ட் இடமாக கருதப்படும்
கொடைக்கானலில் குறைந்தபட்சம் 1 டோஸ் தடுப்பூசி செலுத்தி
கொண்டவர்கள் மட்டுமே செல்ல அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் தடுப்பூசி
செலுத்தி கொள்ளாமல் ஊருக்குள் நுழைகின்றனர் என்ற தகவல் வந்ததால் அதிகாரிகள்
சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்த
பிறகே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் வருபவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் எப்போதும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை விட சற்று கூடி இருப்பதாக தெரிகிறது. அதிகாரிகளின் கெடுக்குபிடி சோதனையால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
0 Response to "சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு – கொடைக்கானல் செல்ல இனி தடுப்பூசி கட்டாயம்!"
Post a Comment