
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டு உள்ள நிலையில்,
மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட
உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் உண்மை நிலவரம் குறித்து
இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் விடுமுறை?
தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் தினசரி தொற்று உறுதி
செய்யப்படுவோர் எண்ணிக்கை 35
ஆயிரம் வரை சென்றது. இதனை கட்டுப்படுத்தும்
நோக்கில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு ஆலோசனை மேற்கொண்டு மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கினை அமல்படுத்தியது. இதில் 14 நாட்கள் எவ்வித தளர்வுகளுடன் இன்றி தீவிர கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் எவ்வித தொய்வும்
இன்றி நடைபெற்றது. தமிழக அரசும் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசை வலியுறுத்தி
பெற்றது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டது.
இவற்றின் விளைவாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரமாக குறைந்தது.
எனவே ஊரடங்கில் படிப்படையக தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை
திரும்பியது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளில்
நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர்
பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 1ம் தேதி 9,
10, 11 மற்றும் 12 ஆகிய
வகுப்புகளுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்கியது. கொரோனா வழிகாட்டு
நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில
மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அடுத்தடுத்து
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஒரு பள்ளியில் 50
மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது அதிர்ச்சியை
ஏற்படுத்தியது. இவ்வாறு பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவியதால் சில மாநிலங்களில்
நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் குறிப்பிட்ட
பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு மாவட்ட
நிர்வாகத்தின் அனுமதியுடன் அதிகபட்சம் ஒரு வாரம் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மறுபுறம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு விடுமுறை அளிக்கப்பட
உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு எந்த ஒரு உத்தரவினையும் பிறப்பிக்கவில்லை. எனவே
பொதுமக்கள் இது போன்ற அதிகாரபூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Response to "தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? உண்மை நிலவரம் இதுதான்!"
Post a Comment