
ரேஷன் கார்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை எவ்வாறு தீர்த்து
கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ரேஷன் கார்டு
இன்றைய காலகட்டத்தில் அனைத்து விதமான விவகாரங்களுக்கும் முக்கியமான
ஆவணமாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. ஆனால், இதில் பலருக்கும் பல பிரச்சனைகள்
இருந்து வருகிறது. மக்களை அதனை எப்படி தீர்த்து கொள்வது என்று கூட தெரியாமல்
தவித்து வருகின்றனர். ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கு மத்திய அரசு
அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி உள்ளது.
சுவிதா என்று கூறப்படும் பொது விநியோக துறை மற்றும் பொது சேவைகள்
அமைப்பும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளனர். இதன் காரணமாக நாட்டில்
உள்ள 3.70 லட்சம் பொது சேவை மையங்கள் மக்களின் குறைகளை போக்க செயல்பட்டு
வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 23.64 கோடை ரேஷன் அட்டைதாரர்கள்
பயன்பெற்று வருவதாக அரசு அறிக்கை ஒன்றினை தெரிவித்துள்ளது. இந்த சேவை மையங்களை
மக்கள் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளை மக்கள் எளிதாக தீர்த்து கொள்ளலாம்
என்றும் கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுக்கு டூப்ளிகேட் பெறுவது, என்னென்ன ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றன என்பது போன்ற தகவல்களையும் இந்த சேவை மையங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், மொபைல் எண் மாற்றம் ஆகியவையும் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மக்கள் அந்த சேவைகளை பெற்று கொள்ளாலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "உங்களது ரேஷன் கார்டில் ஏதேனும் பிரச்சனையா? மத்திய அரசு வழங்கியிருக்கும் எளிய தீர்வுகள்!"
Post a Comment