TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!

Trending

Breaking News
Loading...

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!


தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி இரண்டாம் கட்ட கலந்தாய்வுகளை சில பதவிகளுக்கு நடத்தவில்லை என்றும்
, அதனை உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நிறுவனர் அறிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பல தேர்வுகளுக்கு கலந்தாய்வுகளையும் நடத்தவில்லை. பல மாதங்களுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 3 பதவிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. தற்போது இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது, ‘கடந்த 2019 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட 7 விதமான பதவிகளுக்கு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அந்த பணிகளுக்கான எழுத்து தேர்வுகளும் நடைபெற்றது.

எழுத்து தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் மாதம் 2019ம் ஆண்டு வெளியிட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதே போல் பணி இடங்களின் எண்ணிக்கை 9882 என்று உயர்த்தப்பட்டது. அதில் மொத்தமுள்ள 6007 பணியிடங்களில் 5798 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் 209 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவில்லை. இதற்கான கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று வரை இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

தேர்வர்கள் வேறு ஒரு வேலைக்கும் செல்ல முடியாமல் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதனால் தேர்வாணையம் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக கலந்தாய்வு நடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று அரசு வேலை பெற்றவர்களுக்கு இணையான பணி மூப்பும், ஊதிய விகிதமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

0 Response to "TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel