தமிழகத்திற்கு சென்னை நகர கூட்டுறவு நிலைத்த நகா்ப்புற சேவைகள் திட்டம் என்னும் திட்டத்தின் கீழ் உலக வங்கி ரூ.1,112 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.


சென்னை
நகர கூட்டுறவு:
ஒரு கோடி மக்கள்
தொகையுடன் இந்தியாவில் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநகரமாக சென்னை
திகழ்கிறது. படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கு பல்வேறு
நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்கி இயங்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்து
மாவட்டங்களிலும் இருந்து பிழைப்பு தேடி சென்னையில் மக்கள் குடியேறுவது வழக்கம்.
தமிழகத்தின் பொருளாதார மையமாக சென்னை திகழ்கிறது.
ஆனால் இயற்கை பேரிடர், பருவநிலை மாற்ற பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய
நகரமாகவும் இருந்து வருகிறது. அதிகமான மழைக்காலத்தில் சாலைகள் முழுவதும் மழை
வெள்ளத்தால் மூடுவது போன்ற பல இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்
தமிழகத்தில் தற்போதைய அரசு பல்வேறு நலத்திட்டங்களுடன் நாட்டை வளர்ச்சி பாதை நோக்கி
கொண்டு செல்ல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனை தொடர்ந்து சென்னை நகரை பருவநிலை
மாற்றங்களுக்கு உகந்த அதிக பசுமை நிறைந்ததாகவும், வாழ்வதற்குத் தகுதியுள்ள வகையிலும் உலக
தரத்திலான நகரமாக உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு பணியாற்றி வருகிறது.
தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு உதவும் வகையில் தமிழகத்துக்கு ரூ.1,112 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை நகர கூட்டுறவு நிலைத்த நகா்ப்புற சேவைகள் திட்டம் என்னும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தொகையானது நகரின் சேவைத் துறைகளின் நிதி நிலையை மேம்படுத்த உதவும் என்பதோடு, குடிநீா் விநியோகம் மற்றும் கழிவுநீா் அகற்றுதல், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய 4 முக்கிய நகா்ப்புற சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என கூறப்படுகிறது.
0 Response to "தமிழகத்திற்கு சென்னை நகர கூட்டுறவு நிலைத்த நகா்ப்புற சேவைகள் திட்டம் என்னும் திட்டத்தின் கீழ் உலக வங்கி ரூ.1,112 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது."
Post a Comment