தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி? ரூ.50,000 முதல் பலன்கள்!

Trending

Breaking News
Loading...

தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி? ரூ.50,000 முதல் பலன்கள்!

தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி? ரூ.50,000 முதல் பலன்கள்!


தமிழகத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைக்கும் எண்ணத்தை போக்கும் விதமாக பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்தகைய திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான நிபந்தனைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்:

தமிழகத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு திருமணம் செய்து வைக்க பணம் அதிகம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு பெண் குழந்தைகளை பாரமாக கருதி கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து வந்தனர். பின்னர் அதனை கட்டுப்படுத்த அரசால் கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்பின் அந்த செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது அவ்வாறு ஒன்று இல்லை. எனினும் பெண் பிள்ளை பிறந்தால் அதனை படிக்க வைக்க, வேலைக்கு அனுப்ப, பின்னர் திருமணம் செய்து வைக்க என்று இன்னும் பல்வேறு செலவுகள் வரும் என்பதால் பெண் குழந்தைகளை பாரமாக எண்ணி வருகின்றனர்.

இத்தகைய எண்ணத்தை போக்கும் விதமாக தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது தான் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம். மேலும் பெண் சிசு கொலை, பெண்களின் மதிப்பை உயர்த்துதல், குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் கல்வி அளித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்றவைகளை கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏனெனில் ஒரு பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் பதிவு மேற்கொள்ள வேண்டும். பின்னர் அந்த குழந்தையின் பேரில் அரசு ஒரு தொகையை டெபாசிட் செய்துவிடும். பின்னர் அந்த குழந்தைக்கு 18 வயது முடிந்த பிறகு அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதிலும் அந்த குழந்தை குறைந்த பட்சம் 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இத்திட்டத்திற்கான தகுதிகள் பின்வருமாறு:

திட்டத்திற்கான தகுதிகள்:

திட்டம்-1: ஒரு பெண் குழந்தை மட்டும் – ஆண் வாரிசு இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குழந்தையின் வயது 3க்குள் இருக்க வேண்டும். குழந்தையின் பெயரில் ரூ.50000 வைப்பீடு செய்யப்படும்.

திட்டம்-2: இரண்டு பெண் குழந்தை மட்டும் – ஆண் வாரிசு இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 3 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.25000 வைப்பீடு செய்யப்படும்.

திட்டம்-3: பெற்றோர்கள் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்க கூடாது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை பிறந்திருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.25000 வைப்பீடு செய்யப்படும்.

இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்.

·         35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

·         குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

·         ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.

·         விண்ணப்பிக்கும் போது குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

·         திட்டம்- 1ன் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

·         திட்டம்- 2ன் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், இரண்டாவது குழந்தை பிறந்த ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

·         ஆண்டு வருமானம் ரூ.72,000க் மிகாமல் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு இணைக்க வேண்டிய சான்றுகள்:

·         பிறப்புச் சான்று (வட்டாட்சியர் அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகம்)

·         பெற்றோரின் வயது சான்று (பிறப்புச் சான்று அல்லது பள்ளிச்சான்று அல்லது அரசு மருத்துவரின் சான்று)

·         குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை)

·         வருமான சான்று (வட்டாட்சியர் அலுவலகம்)

·         ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சியர் அலுவலகம்)

·         இருப்பிடச் சான்று வட்டாட்சியர் (விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது அவர்களது பெற்றோர் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்)

மேற்காணும் விவரங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்தும், அசல் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம்.

குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புநிதி பத்திரம் பெற்றுள்ளவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அந்த தொகையை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் போது பின் குறிப்பிடும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மண்டல அலுலகங்களில் உள்ள சமூக நல விரிவு அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

·         வைப்பு நிதி அசல் /நகல்

·         பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

·         10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல்.

·         பயனாளி பெயரில் தனி வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

0 Response to "தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி? ரூ.50,000 முதல் பலன்கள்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel